திருச்சியிலிருந்து 31 கி. மீ. தொலைவில் குளித்தலை உள்ளது. அங்கிருந்து 1.5 கி. மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். தேவர்களுக்கு சிவபெருமான் கடம்ப மரத்தில் காட்சி தந்த தலம். முருகப்பெருமான் பூசித்த தலம். சப்த கன்னியர்கள் பூசித்து அவர்களின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம். ஆதிசேஷன் பூசை செய்த தலம். கார்த்திகை மாத சோம வாரங்களில் ஒரே நாளில் காலையில் திருக்கடம்பந்துறை தலத்தையும், உச்சிக்கால வேளையில் திருவாட்போக்கி (இரத்தினகிரி) தலத்தையும், மாலையில் இத்தலத்தையும் தரிசனம் செய்வது சிறப்பு. |